வணக்கம்,
மதிப்பிற்க்குரிய அம்மா/ஐயா,
இன்று சுமார் 6:45 மணியிலிருந்து 7:00 மணிக்குள் சென்னை கிரோம்பேட்டை- ஹஸ்தினாபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் -500k பேருந்தில் பயணம் செல்லும் பொழுது ,நடத்துனர் செல்லும் பொழுது இடித்துக்கொண்டே சென்றார்.இதனால் அவரிடம் இடிக்காது செல்லுங்கள் என்று கூறினேன்.
அவர் திரும்பவும் எல்லோருக்கும் பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்.
பின்னர் என்னிடம் வரும்பொழுது பயணச்சீட்டை தூக்கி எறிந்து மரியாதை இன்றி நடத்தினார்.
இதனால் பேருந்தை விட்டுக்கீழே இறங்கி விட்டேன்.
இப்படி மகளிர் விடியல் பேருந்து என்று கூறிக்கொண்டு இப்படி பெண்களை இடிப்பதும்,மரியாதை இன்றி நடத்துவதும் நடக்கிறது ,கட்டணமில்லா பேருந்தில் நடத்துனர் இப்படி நடத்துவது அதர்மம் ,இழிவான செயல்.
இவர்கள் செய்வது தவறு என்று கூறுவதால் இப்படி வேறுவிதமாக மரியாதை இன்றி நடத்துவதும் வன்மத்தை காட்டுகிறார்கள்.
இதனால் இப்படிப்பட்ட நடத்துனர் அனைவர்களையும் வண்மையாக கண்டித்து
.தக்க எச்சரிக்கை கொடுத்து.என் போன்ற மக்களை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
கிரோம்பேட்டை.